எல்லா புகழும் ஸ்ரீ ஸ்ரீ குரு மற்றும் கௌராங்கருகே உரித்தாகுக!
எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருகே உரித்தாகுக!
எனது பணிவான வணக்கங்களை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்!
எனது அன்பிற்குரிய குருதேவரே! உங்களுடைய மிகப் பெரிய ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தில் உள்ள பல ஆயிரம் சேவகர்க்குள் ஒரு சேவகர்க்கு சேவை செய்யும் சிறிய சேவகன் தங்களுடைய சீடன் எழுதும் அன்புப் பரிமாற்றம். குருதேவரே! உங்களுடைய கருணையினாலும், ஸ்ரீல பிரபுபாதர், வைஷ்ணவர், பஞ்ச தத்வ, ஸ்ரீ ஸ்ரீ ராதா மாதவ அஷ்டசகி, நரசிம்ஹ தேவரின் கருணையினாலும் மாயாப்பூரில் சேவை செய்ய இந்த சேவகனுக்கு வாய்ப்பு அளித்தமைக்கு மிகவும் நன்றி. குருதேவரே! உங்களுடைய உடல் நிலை நன்றாக இருக்கும் போது , சீடர்களிடம் நேரூக்கு நேர் அன்பு பரிமாற்றமும் மற்றும் ஒரே சமயத்தில் பத்து சீடர்களை அனைத்து கொள்ளுவார் என்று உங்களுடைய சீடர்கள் சொல்லக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் எனது உள்ளத்தில் நான் மிகவும் துர் பாக்கிய சாலி என்று என்னுவேன். அந்த சமயத்தில் நான் உங்களுடைய இல்லை என்று. ஆனால் உங்களுடைய மிக உயர்ந்த கருனையாலும் உங்களுடைய சேவகர் ஷ்யாமரசிக பிரபுவின் கருனையாலும் JPS Archives-வில் சேவை கிடைத்தது. அப்போது ஷ்யாமரசிக பிரபு எனக்கு முதல் சேவையாக 2000-வது ஆண்டு முதல் 2016-வது வரை உள்ள உங்களுடைய புகைப்படங்களை whatsapp எனும் இனைய தளத்தில் செய்திகள் அனுப்ப புகைப்படங்களை தேர்வு செய்யும் சேவை எனக்கு அளித்தார் . அப்போது உங்களுடைய உடல் நிலை நன்றாக இருக்கும் போது உள்ள புகைப்படங்களை தேர்வு செய்தேன். அத்தருனத்தில் ஒவ்வொரு நாலும், ஒவ்வொரு நேரமும் உங்களுடன் இருந்த உணர்வுகிடைத்தது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுடைய கருனையின் முன்பு பெரிய கடலும் சிறு கடுகு .
"ஏபே ஜாஸ குஷுக் த்ரிபுவன"
உமது புகழ் மூவுலகங்களிலும் பரவுவதாக.
தங்களுடைய சேவகன்,
மாதவ சுமங்கள தாஸன்