குருதேவா,
அணுவளவும் பரம்பராவில் இருந்து பிறழாதவரே...
‘யோக்யதா விசாரே கிச்சு நாஹி பாய்
தோமார கருணா ஸார”
அணுவளவும் தகுதியற்ற இந்த தாழ்ந்த உயிர்வாழி தங்களின் கருணையை மட்டுமே நம்பி தங்களின் வியாச பூஜை புகழாரத்தில் பங்கு கொள்கின்றான். இதுவும் தங்களின் காரணமற்ற கருணையே ஆகும்.
தாங்கள் அற்புதங்கள் நிகழ்த்துபவரில்லை, ஒவ்வொரு ஜீவராசியும் கிருஷ்ணரிடம் மீண்டும் சென்றடைய வேண்டும் என்றே செயல்படுபவர், என்றாலும் தங்களின் ஒவ்வொரு அசைவும் மிகவும் அற்புதமே. அதற்கு காரணம் தாங்கள் என்றுமே ஸ்ரீல பிரபுபாதரின் பிரதிநிதியாக விளங்குவதே.
ஒருமுறை தங்களை தரிசிக்க துறையூரிலிருந்து சென்னை ஏர்போர்ட் வந்திருந்தோம். வரும் வழிதோறும் தங்களுக்கு அர்ப்பணிப்பதற்காக தாமரை மலரை, கந்தர்விகா மோஹினி தேவி மாதாஜி எதிர்பார்த்து தேடிக்கொண்டே வந்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் மிகவும் வருத்தப்பட்டு விமான நிலையம் வந்து காத்திருந்தார். எதிர்பாராத விதமாக அருப்புக்கோட்டையில் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஒரு தாமரைப்பூவை கொடுத்து இதை நீங்கள் குருமகராஜருக்கு அர்ப்பணியுங்கள் என்று கூறினார். தாங்கள் விமானநிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தீர்கள். பக்தர்கள் கூட்டத்தில் தங்கள் அருகில் வருவதே பெரிய விஷயமாக இருந்தது. எப்படியோ அந்த தாமரை மலரை உங்களுக்கு சமர்ப்பித்து விட்டார்கள். பிறகு சிறிதுதூரம் தங்களை பின்பற்றி வந்தோம். அப்பொழுது தாங்கள் தங்கள் கழுத்தில் இரண்டாவதாக இருந்த ஒரே ஒரு தாமரை மலர் மாலையை எடுத்து சிறிது தொலைவில் நின்று கொண்டிருந்த கந்தர்விகா மோஹினி மாதாஜியை கை நீட்டி அழைத்தீர்கள் அருகில் வந்ததும் அந்த மாலையை அளித்துவிட்டு ஒரு ஊடுருவக்கூடிய தீட்சண்யமான பார்வை பார்த்தீர்கள். இன்றும் அது எங்கள் அனைவருக்கும் நினைத்தாலே சிலிர்க்கும் ஒரு பார்வை குருதேவா.
நான் எல்லாம் அறிவேன், எப்போதும் உங்களுடனேயே இருக்கின்றேன் பயப்படாதே என்று அந்த பார்வை கொடுத்த தைர்யம் மட்டுமே இன்றும், என்றும் எங்களை வழிநடத்தும்.
குருதேவரிடம் பிரார்த்தனை செய்வது எப்படி என்பதும் எமக்கு தெரியாது. தங்களின் கருணையால் தாங்கள் ஸ்ரீல பிரபுபாதரிடம் செலுத்தும் பிராத்தனைகளை கொண்டே நாங்களும் தங்களிடம் பிரார்த்திக்கின்றோம்.
ஸம்ஸாரே கௌர பிரேம விருஷ்டி
ஹோ பிரபு! தோமார் ஆக்ஞா சிலோ தாஸ
ஓ எமது நித்ய குருதேவா! என்னையும் தங்களின் உத்தரவிற்கு கீழ்படியும் சரணடைந்த சேவனாக்குவீராக.
குருதேவா தோயா கோரோ,
க்ருஷ்ண பக்த யே பார் கோரோ,
த்வார் தோயா அஸம்பவ் ஸம்பவ் ஹோய் ரே
குருதேவா! கருணையுடன் உங்களது கருணையை எனக்கும் வழங்கியருளுங்கள். இந்த வாழ்விலேயே நானும் பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தனாகும் வரமருளுங்கள். உமது கருணையினால் இயலாததும் கூட எளிதாக இயன்றுவிடும்.
என்றும் தங்களின் நிலையிழந்த சேவகன்,
ஜெயந்த கௌராங்க தாஸன், துறையூர்
Jayanta Gaurāṅga Dāsa (dīkṣā),
Thuraiyur, India