ஹரே கிருஷ்ணா. எனது பணிவான வணக்கங்கள் ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் குரு மகராஜருக்கு.
நான் 4 மாலை ஜபம் செய்ய உறுதி எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் குரு மஹாராஜர் கோவை வந்திருந்த பொழுது அவரிடம் தீட்சை பெற விருப்பம் உள்ளவர்கள் பெயரை கொடுத்து அவரிடம் வந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ளுங்கள் என்றபொழுது நானும் சென்று என் பெயரை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி வந்தேன். அப்பொழுது நான் இருந்த மனநிலையில் நாமெல்லாம் எங்கே தீட்சை வாங்கப்போகிறோம் என்று நினைத்திருந்தேன். ஏனென்றால் கிருஷ்ண உணர்வை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளாத நேரம். மேலும் பெளதிக வாழ்க்கையில் முழுவதுமாக ஈடுபாடு கொண்டிருந்தேன். சிறிது காலத்திற்கு பறிகு கிருஷ்ண பக்தியில் முழுவதுமாக ஈடுபட்டு குருமகராஜிடம் தீட்சை பெற்றபொழுதுதான் உணர்ந்தேன். அவருடைய கருணையை. எந்த விதத்திலும் தகுதி இல்லாத மிக தாழ்ந்த நிலையில் உள்ள என்னை இந்த அளவிற்கு கொண்டுவந்து என்னை கிருஷ்ண பக்தியில் ஈடுபடுத்த வைத்தது அவருடைய கருணையும் ஆசிர்வாதமும் ஆகும். அதன்பின் என்னால் முடிந்த சேவையை நான் கிருஷ்ணருக் செய்து கொண்டிருக்கிறேன். கோவை கோவிலில்
ஒருமுறை குரு மஹாராஜர் கோவை வந்திருந்த பொழுது எனக்கு அவரிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அவரிடம் நீங்கள் அதிக நாட்கள் கோவையில் இருக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர் கிருஷ்ருக்கு சேவை செய்யுங்களேன் என்றார். நான் கூறினேன் அவருக்கு சேவை செய்வதைவிட அவருடைய பக்தர்களுக்கு சேவை செய்வதை அவர் மிகவும் விரும்புவார் என்று கூறியதை கேட்டு குரு மஹாராஜர் மிகவும் சந்தோஷத்துடன் சிரித்து ஹரிபோல் என்று கூறி என்னை ஆசிர்வதித்தது என் மனதில் பசுமையாக நிற்கிறது.
அவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட பொழுது கூட அவர் வருடம் தவறாமல் கோவையில் நடைபெறும் ரதயாத்திரையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவதை பார்த்து நான் ஆச்சர்யம் அடைந்துள்ளேன். மேலும் நாம் இந்த உடல் அல்ல, ஆத்மா என்பதை முழுவதுமாக உணர்ந்த ஒரு உயர்ந்த ஆன்மீக குருவாக நான் அவரை பார்க்கிறேன்.
நான் ஒரு முறை மாயாப்புர் பரிக்ரமா சென்றிருந்தபொழுது தினசரி அவரை சந்திக்கும் ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்தது. தினசரி செல்லும் வழியில் அவர் ஏதாவது ஒரு இடத்தில் வந்து எல்லோரையும் சந்தித்து சொற்பொழிவு நிகழ்த்துவார். சில இடங்கள் அவ்வளவு செயகர்யமாக இருக்காது. இருந்தாலும் அவர் உடல் உபாதைகளை பொருட்படுத்தாமல் வந்து பக்தர்களுடன் உரையாற்றிவிட்டுதான் செல்வார். அவரை தரிசிக்கும் பொழுதெல்லாம் நம்மை அறியாமல் ஒரு உற்சாகம் வரும். அவர் கிருஷ்ணருக்கும் அவரது குரு ஸ்ரீல பிரபுபாதருக்கும் செய்யும் சேவையை நினைத்து மிகவும் வியந்திருக்கிறேன்.
அதேபோல் ஒரு குடும்பத்தலைவர் போல் அனைத்து பக்தர்களின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றும் மனப்பான்மையை பார்த்து ஆச்சர்யப்படுவேன்.
ஒருமுறை மாயாப்புரில் மதியம் பிரசாதத்திற்காக பக்தர்கள் காத்துக்கொண்டிருந்தபோது, அங்கு சிறிது வெயில் ஆக இருந்தது. அங்கு வந்த குருமஹாராஜர் உடனே சிப்பந்திகளை கூப்பிட்டு அங்கு சாமியானாவை போடச்சொன்னார். அவர்கள அதை செய்த பிறகுதான் அங்கிருந்து சென்றார்.
என்னை பிறப்பு இறப்பு சக்கரத்தில் இருந்து விடுதலை கொடுத்த குரு மஹாராஜர் அவர்களுக்கு என்னுடைய பயிவான வணக்கங்கள். நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றங்களுக்கு அவரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஸ்ரீ ஸ்ரீ ராத கிருஷ்ணருக்கும் ஜெகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா மாதாவிடம் தொடர்ந்து சேவைசெய்ய அவருடைய கருணையை யாசிக்கிறேன்.
குரு மஹாராஜர் உடல்நிலை தேறி பல ஜீவன்களை கிருஷ்ண பக்திக்கு கொண்டு வரவேண்டும், அவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்கவேண்டும் என்று முழுமுதற் கடவுள் கிருஷ்ணரிடம் என்னுடைய பிராத்தனைகளை தொடர்ந்து நான் செலுத்துவேன்.
கணபதி வைஷ்ணவ தாஸன்
Ganapati vaiṣṇava Dāsa (dīkṣā),
Coimbatore, India