எனது மதிப்பிற்குரிய தவத்திரு ஜெயபதாக சுவாமி குருமகாராஜ் அவர்களுக்கு,
எனது மரியாதை கலந்த அனந்தகோடி நமஸ்காரங்களை தங்களின் தாமரை பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். தங்களின் கருணையை வேண்டி தங்களிடம் அடைக்கலம் (shelter) பெற்ற ஒரு சேவகி Hamsa . ISKCON வருவதற்கு முன்பு ஆன்மிக தேடல் மற்றும் குருவின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தோம் (Sumathi - mother, Nagarajan - Father, and Myself ). கடந்த 2 வருடங்களாக ISKCON வந்துகொண்டு இருக்கிறோம். 1 and 1/2 வருடங்களுக்கு முன்பாக Coimbatore ISKCON இல் நேரில் காணும் பாக்கியம் பெற்று, அன்று மூவரும் தங்களிடம் shelter பெற்று கொண்டோம்.
தங்களின் பெருமைகள், miracles and glorification அனைத்தையும் மூத்த பக்தர்களின் வாயிலாக கேட்டு மெய் சிலிர்த்து ஆனந்தமடைந்தோம். இந்த இயக்கத்தின் மூலமாக ஸ்ரீல பிரபுபாதாவின் புத்தகங்களை படித்தும், பக்தர் சங்கத்தின் மூலம் ஸ்ரீல பிரபுபாதாவின் அறிவுரைகளை கேட்டும், ஆன்மிக தெளிவு பெற்றோம். இந்த இயக்கத்தை தந்தருளிய பகவான் கிருஷ்ணராகிய சைதன்ய மஹாபிரபுவிற்கும், குரு சீடப் பரம்பரைக்கு, ஸ்ரீல பிரபுபாதாவிற்கும், குரு மஹாராஜராகிய தங்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
குரு மகாராஜ், தாங்களே கிருஷ்ணரின் பிரதிநிதியாக இருந்து எங்களுக்கு வழி காண்பிக்கிறீர்கள். தங்களிடம் இருந்தே "ஆன்மா என்றால் என்ன? ஆன்மா எவ்வாறு கிருஷ்ண பக்தியில் செயல்பட வேண்டும்" என்பதை அறிந்தோம். குரு மகாராஜ்! தங்களிடம் தீக்சை பெற்று கொள்ள நாங்கள் மூவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துகொண்டுளோம். இதற்கான முயற்சியில் நாங்கள் மூவரும் siksha level ஸ்ரீல பிரபுபாதா ஆஷ்ரயாவரை எடுத்துளோம்.
தற்போது நான் 8 மாத கர்ப்பிணியாக உள்ளேன். பிறக்கவிருக்கும் இக்குழந்தை கிருஷ்ண பக்தனாக இருக்க வேண்டும். தங்களின் பேரருளை இக்குழந்தைக்கு வழங்கி, தங்களின் சேவையில் இக்குழந்தையை ஈடுபடுத்துங்கள். இக்குழந்தைக்கு தாங்களே பெயரை தேர்ந்தேடுத்து சூட்டும் படி அன்புடன் வேண்டுகிறேன்.
இப்பிறவியில் ஆன்மிக கடைத்தேற்றத்திற்காகவே கிருஷ்ணரே எங்களை தங்களிடம் அனுப்பி வைத்ததாக உணர்கிறோம். இது எங்களின் மாபெரும் பாக்கியமாகும். இக்கடிதத்தை எழுதுவதற்கு கூட தகுதியற்றவராக உள்ளோம். கிருஷ்ண பக்தியில் முன்னேறி கூடிய விரைவில் கோலோக விருந்தவனம் செல்ல தங்களின் காரணமற்ற கருணையை யாசிக்கிறோம். நாங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த அபராதங்களை மன்னிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
வாஞ்சா கல்பதருப்ய ச க்ருபா சிந்துப்பய ஏவ ச
பதிதானாம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ நமோ நம :
Mentor : Viseshwari Gopi Devi Dasi
தங்களின் முக்கியமற்ற சேவகர்கள்
Sumathi, Nagarajan and Hamsa