Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Bhagavatī Devī Dāsī (Chennai - India)

அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய என் குரு மஹாராஜருக்கு,

தங்களுடைய பவித்திரமான திருவடிகளுக்கு என் பணிவான வணக்கங்களும், எல்லா புகழும் உரித்தாகட்டும்!

ஸ்ரீல ப்ரபுபாதருக்கே!

ஓம் அஜ்ஞான-திமிராந்தஸ்ய
ஞானாஞ்ஜன-சலாகயா
சக்ஷுர் உன்மீலிதம் யேன
தஸ்மை ஸ்ரீ குரவே நம:

ஓம் விஷ்ணுபாதாய க்ருஷ்ணபிரஸ்தாயபூதலே
ஸ்ரீமதே ஜயபாதக ஸ்வாமிந இதி நாமினே
நாமாசார்ய பாதாய நித்யை க்ருபா பிரதாயினே
கௌர கதா தாம தயா நகர் கிராம தாரிணே

எனக்கு இப்படியொரு அருமையான வாய்ப்பை வழங்கி, எப்படி எழுத வேண்டும் எனும் வழிகாட்டுதலையும் அளித்ததற்காக என் சிக்ஷாகுரு ஹரி கீர்த்தனப் பிரபுவிற்கு எனது வணக்கங்களையும் சமர்ப்பிக்கிறேன்.

உங்கள் கிருஷ்ண உணர்வு பாதையில், ரீல் ப்ரபுபாதரின் உபதேசங்களை பின்பற்றி, எந்த சூழ்நிலையிலும் பிரசாரம் செய்வதையும், செயல்படுத்துவதையும் நான் கண்டு வியந்தேன். இது எனக்குப் பெரிய ஊக்கமாக உள்ளது.

உங்கள் காரணமற்ற கருணையினால், பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு கிருஷ்ண உணர்வை வழங்கி, பக்தித் தொண்டை செயல் படுத்த கற்றுக் கொடுக்கிறீர்கள். உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும், சிங்கம் போல எழுந்து, வகுப்புகள் எடுத்து, பிரசாரம் செய்ததை நினைத்து நான் மிகவும் ஊக்கமடைகிறேன்.

தாங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து, தங்களின் பராமரிப்பை மழைப்போல் அனைத்து ஆத்மாக்களுக்கும் பொழிந்து, கிருஷ்ண ப்ரேமையை வழங்க வேண்டும் என்று நானும் வேண்டுகிறேன்.

ஓம் நரசிம்மர், ஜகன்னாதர், பலபத்ரா, சுபத்ரா, மற்றும் துளசி மகாராணியின் திருவடிகளிலும் உங்கள் ஆரோக்கியம், பாதுகாப்பு, நீடித்த சேவை, ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கிறேன்.

தற்போது, ஹரி கீர்த்தன் பிரபுவின் வழிகாட்டுதலில், Mohana mataji உதவியுடன், தினமும் 16 முறை ஜபம் செய்யும் குழுவில் நானும் சேர்ந்துள்ளேன்.

Kesari Vibhasini mataji தலைமையில் தினசரி புத்தக வாசிப்பு (பாகவதம், சிறிய புத்தகங்கள், ராமாயணம், ப்ரபுபாதரின் நூல்கள்) செய்கிறேன்.
Suresha Prabhu மற்றும் Kesari mataji இடமிருந்து வகுப்புகளில் பங்கேற்கிறேன்.
வெள்ளிக்கிழமைகளில் பாகவதம் வகுப்பு,
Geeta Amrita வகுப்புகள்,
Hari Kirtan Prabhu வழிநடத்தும் Bhakti Sastri வகுப்புகள் ஆகியவற்றில் கலந்து கொள்கிறேன்.

Sankapani Prabhu வழியிலே என் நண்பிகளுக்கும் இவற்றை எடுத்துச் செல்ல முயல்கிறேன்.
இவை அனைத்தும் Zoom மற்றும் ஆன்லைன் வாயிலாக தாங்கள் வழங்கிய தயவினால் நடைபெறுகிறது, Gurumaharaj.

நான் தீட்சை பெற ஆவலுடன் உள்ளேன். அதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, தங்களின் ஆசீர்வாதமும், கருணையும் வேண்டுகிறேன். என் கணவர், குழந்தைகள் மற்றும் நானும் தங்களின் திருவடிகளை சரணாகதி செய்து கொண்டிருக்கின்றோம்.

தாங்கள் வைத்திருக்கும் அந்த குச்சி இடியால் எங்களைத் தொட்டு ஆசீர்வதிக்க மிகவும் ஆசையாக இருக்கிறேன்.

எனது நித்திய சாதனையில் ஒழுங்கு படுத்தி, சாஸ்திரங்களைப் படித்து, பக்தித் தொண்டில் நிலைத்து இருக்க நான் உழைக்கிறேன்.
எனது சக சிக்ஷாகுருக்கள் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்:

Promatatte Prabhu, Champaka Mataji, Suresha Prabhu, Kesari Mataji, Madhavapriya Mataji, Kasai Mataji, Mohana Mataji, Sankapani Prabhu, Hari Kirtan Prabhu, மற்றும் அனைத்து வைஷ்ணவர்களுக்கும் என் இருதயப் பாராட்டுகள்.

நான் மிகவும் நன்றிக்கடன் பட்டவன்,
தங்கள் சேவையில் எப்போதும் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பை தருங்கள்,
ஒரு தூசியாக இருந்தாலும் பரவாயில்லை,
எனக்கேற்பிய தகுதி இல்லாவிட்டாலும்,
இந்த அருமையான வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி.

அடியேன்,

Karpaga Lakshmi
சென்னை