Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Gāndharvikā Mohini Devī Dāsī (Chennai - India)

குருவருள் திருவருள்!

ஜெய் ஜெய் 69வது வியாசபூஜை தித்திப்புநாள்!

ஈரேழு உலகெங்கெனும் நோக்கினும்

எம்முடைய குருவிற்கு நிகர் எமது குருவே!

கருணைமயமானவர் அறிவுமயமானவர்!

ஈரேழு உலகிற்கும் உதாரணமயமானவர்!

சீடர் குழாமுக்கு உயிரானவர்!

ஈரேழு உலகிற்கும் அன்புமயமானவர்!

பிரபுபாதரின் தவப்புதல்வரானவர்!

ஈரேழு உலகிற்கும் கிடைத்தற்கரியவரானவர்!

இயற்கைத்தாயின் நல்வரமானவர்!

ஈரேழு உலகிற்கும் பொக்கிஷமானவர்!

மனிதகுலத்திற்கே நல்உதாரணமானவர்!

ஈரேழு உலகிற்கும் சத் புருஷனானவர்!

உள்ளத்தெளிவின் உருவமானவர்!

ஈரேழு உலகிற்கும் ஞான வடிவானவர்!

பார்போற்றும் புகழுடையவர்!

ஈரேழு உலகிற்கும் பெருமையளிப்பவர்!

விருப்பு வெறுப்பற்ற நிர்மத்ஷரானவர்!

ஈரேழு உலகிற்கும் காழ்ப்புணர்ச்சியற்றவர்!

விருந்ததேவியின் கடாக்ஷமயமானவர்!

ஈரேழு உலகிற்கும் வழிகாட்டியானவர்!

ப்ரஹலாதரின் உள்ள உறுதியுடையவர்!

ஈரேழு உலகிற்கும் ஆதாரமானவர்!

துருவரின் விடாமுயற்சியுடையவர்!

ஈரேழு உலகிற்கு வெற்றியின் நாயகனானவர்!

ப்ருதுவின் சீரிய குணமுடையவர்!

ஈரேழு உலகிற்கும் சுபிக்ஷமானவர்!

ஜடபரதரின் பற்றின்மையை கொண்டவர்!

ஈரேழு உலகிற்கும் நல் விளக்கமானவர்!

கபிலரின் பிரதிநிதியானவர்!

ஈரேழு உலகிற்கும் உற்ற நண்பனானவர்!

சம்புவின் அருள்பெற்றவர்!

ஈரேழு உலகிற்கும் ஆஸூதோஷரானவர்!

பிரம்மதேவரின் ஞானவடிவானவர்!

ஈரேழு உலகிற்கும் வேதவடிவானர்!

நாரதரின் ஆசியானவர்!

ஈரேழு உலகிற்கும் சமநோக்குடையவர்!

பாகவத தர்மத்தின் சொரூபமானவர்!

ஈரேழு உலகிற்கும் பிரேமையானவர்!

பக்தர்களின் இதயமானவர்!

ஈரேழு உலகிற்கும் உயிர்மூச்சானவர்!

எளியோரையும் விடுவிப்பவர்!

ஈரேழு உலகிற்கும் பரமரட்சகனானவர்!

நல்லோரின் தேடலானவர்!

ஈரேழு உலகிற்கும் வாழ்வானவர்!

ஸ்ரீமதி ராதையின் அன்பிற்குரியவர்!

ஈரேழு உலகிற்கும் அமிர்தமயமானவர்!

நீலமேக ஸ்யாமாவின் உற்றனானவர்!

ஈரேழு உலகிற்கும் ஆனந்தமயமானவர்!

கந்தர்விகா புதல்வியின் அனைத்துமானவர்!

ஈரேழு உலகிற்கும் நல்வரவானவர்!

வாழிய வாழிய நின் நற்புகழ்!

பாரெங்கும் போற்றட்டும் நின் தயை!

வாழிய வாழிய நின் தாமரைப்பாதம்!

பாரெங்கும் பரவட்டும் நின் நறுமணம்!

வாழிய வாழிய நின் பொற்காலம்!

பாரெங்கும் வளரட்டும் நின் நிழலிலே!

வாழிய வாழிய நின் கருணாகடாக்ஷம்!

பாரெங்கும் பெற்றுய்யட்டும் இடையறாதே!

வாழிய வாழிய நின் திருவருள்!

பாரெங்கும் பரவட்டும் நின் குருவருள்!

வாழிய வாழிய எம்குருவின் 69வது வியாச பூஜை மஹோத்ஸவம்!

பாரெங்கும் போற்றட்டும் எம் குருவின் தன்னிகரற்ற பராக்ரமத்தினையே!

அனைத்து சீடர்களின் கோடானுகோடி உளமார்ந்த வந்தனங்கள்

தீனபந்துவான நம் குருவின் பொற்காத கமலங்களுக்கே உரித்தாகுக!

குருவே சரணம் குருவின் திருவடியே சரணம் சரணம்.

குருவின் பொற்பாத சேவையை என்றென்றும் யாசிக்கும்

காந்தர்விகா மோஹினி தேவி தாஸி

Gāndharvikā Mohini Devī Dāsī (Dīkṣā),
Sunadavasudeva Dasa
Gowri
Shivesh
Thuraiyur, India