Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Bhagyavati Mugara Devī Dāsī (Srirangam - India)

ஹரே கிருஷ்ணா!

நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரேஷ்டாய பூதலே
ஸ்ரீமதே ஜெயபதாகா ஸ்வாமின் இதி நாமினே
நமோ ஆச்சார்ய பாதாய நிதாய் க்ருப பிரதாயினே
கௌர கதா தாமதாய நகர க்ராம தாரிணே

நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரேஷ்டாய பூதலே
ஸ்ரீமதே பக்திவேதாந்த ஸ்வாமின் இதி நாமினே
நமஸ்தே ஸரஸ்வதி தேவே கௌரவாணி ப்ரசாரிணே
நிர்விஷேஷ ஷூன்யவாதி பாஸ்சத்ய தேசதாரிணே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

1. உயிர்மெய் எழுத்துக்களில் நமது ஆன்மீக குரு மஹாராஜர்!

குரு மஹாராஜர் தவத்திரு ஸ்ரீல ஜெயபதாகா ஸ்வாமி குரு மஹாராஜர்!

அகில உலக கிருஷ்ண பக்தர்கள் போற்றும் குரு மஹாராஜர்!

ஆன்மீக பாதையில் ஆத்மாக்களை வழிநடத்தும் குரு மஹாராஜர்!

இனிமையாய் இதயங்களை கௌராங்கா சொல்லவைக்கும் குரு மஹாராஜர்!

ஈவதில் பக்திதொண்டினை ஸ்ரீ கிருஷ்ணருக்கு வழங்கும் குரு மஹாராஜர்!

உலகமே வியந்துபோற்றும் பக்தி விருக்ஷா நடத்தும் குரு மஹாராஜர்!

ஊக்கத்துடன் பக்தர்களை பாராட்டி கௌரவிக்கும் குரு மஹாராஜர்!

எல்லோரின் இதயத்தினில் பகவானை காணச்செய்யும் குரு மஹாராஜர்!

ஏணியாய் இதயத்தினில் பகவானை காணச்செய்யும் குரு மஹாராஜர்!

ஐயம் தனை இதயத்தில் நீக்கி ஹரே கிருஷ்ண மஹா-மந்திரம் கூறவைக்கும் குரு மஹாராஜர்!

ஒற்றுமையாய் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பக்தர்களை வளர்க்கும் குரு மஹாராஜர்!

ஓசையுடன் கைதட்டி கரத்தாள மேளம்தட்டி மஹா-மந்திரம் கீர்த்தனம் பாடும் குரு மஹாராஜர்!

ஔடதமாய் ஆன்மீக மருந்தினை வழங்கி இதயங்களில் தூசை நீக்கும் குரு மஹாராஜர்!

அகத்தில் அக்ஞான ஒளிநீக்கி பிரம்மனை, பரமாத்மாவை, பகவானை தியானம் செய்ய வைக்கும் குரு மஹாராஜர்!

என்றும் எந்த ஜென்மத்திலும் நலம் விரும்பி, பாக்யவதி முகாரா தேவி தாஸி

2. குரு மகராஜிடம் ஆசிகள் கேட்கும் பக்தை, பாக்யவதி முகாரா தேவி தாஸி!

அனைவருக்கும் அறிவு ஒளி பிறக்கட்டும் எங்கள் குரு மஹாராஜர்!

எல்லோருக்கும் அறியாமை இருள் விலகட்டும் எங்கள் குரு மஹாராஜர்!

கிருஷ்ணரின் அருள் என்றுமே கிடைக்கட்டும் எங்கள் குரு மஹாராஜர்!

கிருஷ்ணரை திருப்தி செய்ய பொருள் பெருகட்டும் எங்கள் குரு மஹாராஜர்!

என்றும் உங்கள் பக்திதொண்டுகளின் புகழ் பரவட்டும் எங்கள் குரு மஹாராஜர்!

எல்லோருக்கும் பக்தி வழியில் நலம் வளரட்டும் எங்கள் குரு மஹாராஜர்!

கிருஷ்ண பக்தர்கள் இப்பிறவியிலேயே கோலோகம் செல்லட்டும் எங்கள் குரு மஹாராஜர்!

ஹரே கிருஷ்ண மஹா-மந்திரம் எப்போதும் எல்லோரும் சொல்லட்டும் எங்கள் குரு மஹாராஜர்!

பிறக்க, விலக, கிடைக்க, பெருக, பரவ, வளர, செல்ல, சொல்லவேண்டி பிரார்த்தனை செய்யும் தங்களின் திருப்பாதம் பணிந்திடும் நலம் விரும்பியான பாக்யவதி முகாரா தேவிதாஸி!

3. குரு மஹாராஜர் அவர்களை போற்றி பாராட்டும் எண்ணங்கள்!

அன்பானவர் இதயங்களில் உலகம் போற்றும் குரு மஹாராஜர்!

ஆன்மீக ஞானம் கிருஷ்ணரிடம் வளர்க்கும் குரு மஹாராஜர்!

இதயங்களில் பரமாத்மாவை உணர்த்தும் குரு மஹாராஜர்!

ஈகையில் கிருஷ்ணருக்கு தானம் வழங்கும் குரு மஹாராஜர்!

உலகையே சுற்றி சுற்றி பக்தி விருட்சாவை வளர்க்கும் குரு மஹாராஜர்!

ஊக்கத்துடன் உடல் பலவீனம் கருதாது பக்தர்களை மூழ்கடிக்கும் குரு மஹாராஜர்!

எறும்புபோல் சுறுசுறுப்புடன் பக்தியில் மூழ்கடிக்கும் குரு மஹாராஜர்!

ஏற்றம் பெற கோலோகத்தில் இப்பிறவியே என ஹரே கிருஷ்ண மஹா-மந்திரம் கூறும் குரு